மயிலாடுதுறையில் தனியார் வங்கியொன்று கடனை முழுமையாகத் திரும்பச் செலுத்திய பிறகும், கூடுதல் பணம் கேட்டு மிரட்டி வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்து வங்கியிடமிருந்து தடையில்லா சான்று பெற்றுதரும்படி கோரிக்கை:-
மயிலாடுதுறையில் தனியார் வங்கியில் (வெரிடாஸ்) பெற்ற கடனை முழுமையாக செலுத்திய நிலையில், கூடுதல் பணம் கேட்டு மிரட்டும் வங்கி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்ிசயர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் ஶ்ரீகாந்திடம் மனு அளித்து மறுமலர்ச்சி திமுக-வின் மாநில இளைஞர் அணிச் செயலாளர் ப.த. ஆசைத்தம்பி கோரிக்கை விடுத்துள்ளார். அவர் அளித்த மனுவில் மயிலாடுதுறை வட்டம், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் உள்ள தனியார் வங்கியில் ரூ.12 லட்சம் கடன் பெற்றிருந்தார். இதற்கான அனைத்து மாதாந்திரத் தவணைகளையும் (EMI) அவர் தொடர்ந்து முறையாகச் செலுத்தி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் மூன்று மாதத் தவணை விடுபட்டிருந்த நிலையில், பின்னர் அதற்கான முழுத் தொகையையும் கடன் கால வரம்பிற்குள்ளாகவே கட்டி முடித்துள்ளார். இருப்பினும், வங்கியில் 3 மாதத் தவணை செலுத்தப்படவில்லை எனக் கூறி, அதற்கு வட்டி மற்றும் அபராதத் தொகை என்ற பெயரில் மேலும் ரூ.3 லட்சம் செலுத்த வேண்டும் என வங்கி நிர்வாகம் நிர்ப்பந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. அத்துடன், வீட்டிற்கு நேரடியாக வந்து பணத்தைச் செலுத்தக் கோரி மிரட்டல் விடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, கடன் முழுமையாக அடைக்கப்பட்டதற்கான ‘தடையில்லா சான்றிதழை’ (NOC) வங்கியிடமிருந்து பெற்றுத்தர வேண்டும் எனவும், இதுபோன்று பொதுமக்களை மோசடி செய்யும் வங்கி நிர்வாகத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். ,















