September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முதல்வர் ஸ்டாலின் வெற்று விளம்பரம் தேடுகிறார் நயினார் நாகேந்திரன் விளாசல்!

by sowmiarajan
January 11, 2026
in News
A A
0
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முதல்வர் ஸ்டாலின் வெற்று விளம்பரம் தேடுகிறார் நயினார் நாகேந்திரன் விளாசல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” என்ற பெயரில் மாநிலம் தழுவிய தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாஜக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.

அவர் தனது உரையில், “கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இன்னும் காகித அளவிலேயே உள்ளன. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், எதையுமே செய்யாமல் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்று விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வருகிறார். காவிரி விவகாரத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் அணைகள் கட்டப்பட்ட போது கருணாநிதி மௌனமாக இருந்தார். இப்போதும் அண்டை மாநிலங்களுடன் இணக்கமாக இருந்து தமிழகத்தின் நலனை முதல்வர் புறக்கணிக்கிறார். ஆனால், எம்ஜிஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரையிலான அதிமுக ஆட்சியில் காவிரி உரிமை நிலைநாட்டப்பட்டது” என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளின் நலனில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை எனக் குற்றம் சாட்டினார். “டெல்டா பகுதியில் கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளுக்கு வெறும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் இந்த அரசு, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்குவது வேதனையானது. இதுதான் இவர்களின் திராவிட மாடல் ஆட்சியா?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், சிறுபான்மையினர் குறித்துப் பேசிய அவர், வட இந்திய மாநிலங்களில் பாஜக ஆட்சியில் சிறுபான்மை மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும், திமுக போலி மதச்சார்பின்மையைப் பேசி வருவதாகவும் விமர்சித்தார்.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுதல் மற்றும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் தீர்மானங்கள் குறித்துப் பேசிய அவர், மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்ததிலிருந்து திமுக தரப்பு மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த எழுச்சிமிகு கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் எம்.எல்.ஏ, பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பூ, தமாகா மாநில பொதுச் செயலாளர் குடவாசல் எஸ். தினகரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Tags: Attack UnfulfilledCriticism Nainarnagendranpoliticalstalin
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மதுரை வடக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு தேர்தல் அலுவலரிடம் அதிமுக டாக்டர் பா.சரவணன் புகார்!

Next Post

மதுரையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளைத் திறந்த வைத்தார் செல்லூர் ராஜூ

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: அரசின் மனு மீது இன்றே தீர்ப்பு

December 4, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.