தமிழகத்தில் பள்ளி கூடங்களில் காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வர் ஜோசப் விஜய் க்கு பாராட்டுகள் மற்றும் நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலையில் மாணவர்கள் தவித்து வருவதாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலப்பை மக்கள் இயக்க தலைவரும் திரைப்பட இயக்குனருமான P.T. செல்வகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பள்ளிகளில் கல்வி கட்டணத்தில் போர்டுகளில் எழுதி வெளிபடை தன்மையை கொண்டு வந்த முதல்வர் மருத்துவ கல்வியில் கட்டணத்தை வெளிபடை தன்மை கொண்டு வந்தால் ஏழை எளிய மாணவர்கள் பயன் பெறுவார்கள் என அரசுக்கு கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலப்பை மக்கள் இயக்க தலைவரும் திரைப்பட இயக்குனருமான P.T. செல்வ குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், தமிழகத்தில் பள்ளி கூடங்களில் வழங்கப்பட்டு வரும் காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டியதற்கு முதல்வர் ஜோசப் விஜய் க்கு நன்றியும் வாழ்த்துகளும் பாராட்டும் தெரிவித்தார் காமராஜர் பிறந்த நாளை அரசு விடுமுறையாக அரசு அறிவித்து பள்ளி கூடங்களில் திருவிழாவாக நடத்த வேண்டும் என்றும் நீட் தேர்வில் உள்ள குளறுபடிகளுக்காக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவ கல்வி கட்டணத்தால் படிப்பை தொடர முடியாமல் மாணவர்கள் தவித்து வருவதாகவும் பள்ளிகளில் கட்டணத்தை போர்டுகளில் எழுதி வெளிபடை தன்மை வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதை போன்ற மருத்துவ கல்வியிலும் கட்டணத்தில் வெளிப்படை தன்மை வேண்டும் இதை அரசு செய்தால் ஏழை எளிய மக்கள் பயன் பெறுவார்கள் என அவர் கூறினார்















