January 14, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

2027ல் நடைபெறும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு : இரண்டு கட்டங்களில் நடைபெறும் என உள்துறை அமைச்சகம் அறிவிப்பு !

by Priscilla
June 5, 2025
in News
A A
0
2027ல் நடைபெறும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு : இரண்டு கட்டங்களில் நடைபெறும் என உள்துறை அமைச்சகம் அறிவிப்பு !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, இந்த கணக்கெடுப்பு எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2027 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் மக்கள்தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பனி சூழ்ந்த பகுதிகளான லடாக், ஜம்மு & காஷ்மீர், உத்தராகண்ட் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளில், கணக்கெடுப்பு 2026 அக்டோபர் 1ஆம் தேதி ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம், 1948 மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிகள், 1990 ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இதில் சேகரிக்கப்படும் தரவுகள் 2028 இறுதிக்கோ அல்லது 2029 தொடக்கத்திற்கோ வெளியிடப்படும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இந்த அறிவிப்பை கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது :

“2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து தொகுதி மறுவரையறை அவசியம். ஆனால், 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிவைத்திருப்பது, தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்கும் பாஜகவின் திட்டம். இதை நாம் முன்பே எச்சரித்தோம், இன்று அது உண்மை என நிரூபணமாகியுள்ளது.”

மேலும் அவர், அண்ணா டிஎம்கே தலைவர் பழனிசாமியை, பாஜகவுடன் சேர்ந்து இந்த சதிக்குத் துணைபோகிறார் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

“டெல்லி ஆதிக்கத்திற்கு பழனிசாமி அடிபணிந்துவிட்டார் என்பது தெளிவாகியுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நியாயமான தொகுதி மறுவரையறையை வலியுறுத்தி ஒன்றுபட வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தேதி மற்றும் அதன் அரசியல் தாக்கங்கள் தொடர்பான விவாதம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Caste-wise censusmk stalintamilnadutwo phases
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மதுரை ரயில்வே கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 26 ஊழியர்களுக்கு ‘ ரயில் சேவா புரஸ்கார் ‘ விருது !

Next Post

ஜிஎஸ்டி-யில் மாற்றம் வரப்போகுது… யாருக்கு லாபம் ?

Related Posts

மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்
News

January 14, 2026
ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
திடீரென வேட்டி சட்டை அணிந்து வந்த முதல்வர் ஸ்டாலின்
News

திடீரென வேட்டி சட்டை அணிந்து வந்த முதல்வர் ஸ்டாலின்

January 14, 2026
Next Post
ஜிஎஸ்டி-யில் மாற்றம் வரப்போகுது… யாருக்கு லாபம் ?

ஜிஎஸ்டி-யில் மாற்றம் வரப்போகுது… யாருக்கு லாபம் ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பராசக்தி படக்குழுவுடன் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

பராசக்தி படக்குழுவுடன் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

January 14, 2026
மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

January 14, 2026
ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

January 14, 2026
சென்னை சாலைகளில் மீண்டும் பழைய வகை பேருந்துகள்

சென்னை சாலைகளில் மீண்டும் பழைய வகை பேருந்துகள்

January 14, 2026
மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

0
ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

0
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

0
திடீரென வேட்டி சட்டை அணிந்து வந்த முதல்வர் ஸ்டாலின்

திடீரென வேட்டி சட்டை அணிந்து வந்த முதல்வர் ஸ்டாலின்

0
மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

January 14, 2026
ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

January 14, 2026
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
திடீரென வேட்டி சட்டை அணிந்து வந்த முதல்வர் ஸ்டாலின்

திடீரென வேட்டி சட்டை அணிந்து வந்த முதல்வர் ஸ்டாலின்

January 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.