இந்திய சினிமாவில் அழுத்தமான கதைகளை அழகாக படமாக்குவதில் முனைப்புக் காட்டுபவர் தான் பாலிவுட் நடிகர் ஆமீர்கான். அவரது தங்கல் படம் இன்றளவும் இந்திய சினிமாவில் அதிகம் வசூலித்த படம் என்ற பெருமையை பெற்றள்ளது. தற்போது ஆமீர்கான் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தான் sitaare zameen par. இந்தப் படத்தை இயக்குநர் ஆர். எஸ். பிரசன்னா இயக்கி , படத்தை ஆமீர்கான் தயாரித்துள்ளார்.
மன வளம் குன்றியவர்கள் இணைந்த ஒரு கூடைப்பந்து அணி எப்படி இறுதியில் சாதிக்கிறது என்பதை மையமாக வைத்து உருவாக்கிய இந்தப் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வரவேற்பை பெற்றள்ளது .
இத்திரைப்படம், ஜூன் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான பின்பு தான் ஓடிடிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் தயாரிப்பாளர் அமீர் கான் படம் வெளியான 8 வாரங்கள் கழித்து தன் யூடியூப் சேனலில் கட்டணம் செலுத்தி பார்க்கும் வகையில் படத்தை வெளியிட உள்ளாராம். இந்த படத்தை 100 கோடி கொடுத்து வாங்க பிரபல ஓடிடி நிறுவனங்கள் தயாராக இருந்தபோதிலும், ஓடிடியை புறக்கணித்து யூடியூபில் வெளியிடும் அமீர் கானின் தைரியமான முயற்சியைத் திரையுலகத்தினர் பாராட்டி வருகின்றனர்.