சாப்பிட்ட பிறகு வரும் இந்த தூக்கம் அறிவியல் மொழியில் ‘போஸ்ட்ராண்டியல் சோம்னலன்ஸ்’ (post-prandial somnolence) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு நோய் அல்ல. ஆனால் நமது உடலின் இயற்கையான உயிரியல் செயல்முறையின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த தூக்கம் சில காரணங்களால் அதிகரிக்கிறது.
சாப்பிட்ட பிறகு பலர் தூக்கம் மற்றும் சோம்பலாக உணர்கிறார்கள் என்று சுகாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். செரிமானம் மோசமாக இருப்பவர்கள் அல்லது தூக்கப் பழக்கம் குறைவாக உள்ளவர்கள் உணவுக்குப் பிறகு தூக்கம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமே . , நாம் சாப்பிடும்போது, செரிமான அமைப்பை நோக்கி இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது மூளைக்கு நோக்கி குறைகிறது. இது நம்மை சோம்பலாகவோ அல்லது தூக்கமாகவோ உணர வைக்கின்றது.
இதற்கு எப்போதும் சீரான மதிய உணவை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் சொல்கீறார்கள். ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிட வேண்டாம் எனவும், சிறிய அளவில் பல முறை சாப்பிடுங்கள். உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடப்பது தூக்கத்தையும் சோம்பலையும் குறைக்க உதவும், இது மிகவும் எளிமையான விஷயம் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர்.