முதல்வர் பிறந்தநாள் முன்னிட்டு விழுப்புரத்தில் ரத்ததான முகாம்.
விழுப்புரத்தில் தமிழக முதலமைச்சரின் 52-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகி கில்லி சுகர்ணாத் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். நிகழ்ச்சியில் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் திரளாக பங்கேற்று சமூகப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த ரத்ததான முகாம் மூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். உடன் பொய்கை பாஸ்கர்













