மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை விடுத்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் மனு:-
நீட் தேர்வு வினாத்தாள் முறைகேட்டை கண்டித்தும், டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான பதவி விலக வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனை கண்டித்து மாணவர்களை கைது செய்து தாக்கியதாக குற்றம் சாட்டி மயிலாடுதுறையில் நேற்று இரவு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் இணைந்து கிட்டப்பாடி அங்காடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் சிங்காரவேலன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஐயப்பன், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அமுல் காஸ்ட்ரோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் விஜய் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 6 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் நிலையப் பினையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்த 11 நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில்
டில்லியில் வன்முறை வெறியாட்டம் நடத்திவரும் கரப்பான்பூச்சி கட்சியினருக்கு ஆதரவாக மயிலாடுதுறையில் நேற்று இரவு கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரிந்து போராட்டம் நடத்தினர்.
மாநில குழு உறுப்பினர் சிங்காரவேலன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.















