மளிகை கடையில் பொருட்கள் வாங்க வந்த 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல். ஆட்டோ டிரைவர் போக்ஷோ சட்டத்தில் கைது.
மயிலாடுதுறை கூறைநாடு கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் பொன்னையா மகன் வெங்கடேஷ் (வயது 45). ஆட்டோ டிரைவரான இவர், மளிகை கடையில் பொருட்கள் வாங்க வந்த 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலின் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று தனது தாயாரிடம் மளிகைக் கடையில் நடந்ததை தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் சம்பவம் குறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் ஆட்டோ டிரைவர் வெங்கடேசனை கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட வெங்கடேசன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.














