நாம் தமிழர் கட்சி துண்டை அணிந்து வந்த கீழ்வேளூர் வேட்பாளர் கார்த்திகாவை உள்ளே அனுமதிக்காததால் வாக்குவாதம், திமுக, அதிமுக கரை வேட்டி கட்டியதை எப்படி அனுப்புவிங்க, அதை அவிழ்த்துவிட்டு அனுப்புவிங்ளா என்று ஆவேசம்
நாகப்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் நாகை மாவட்டத்திற்கான வாக்கு என்று மையம் அமைந்துள்ளது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ள நிலையில் வாக்கு என்னும் மையத்திற்குள் வந்த கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகாவை கட்சி சின்னம் அமைந்துள்ள துண்டை அணிந்து இருப்பதால் வாக்கு எண்ணும் மையத்திற்கு போக போலீசார் அனுமதிக்கவில்லை, இதை தொடர்ந்து போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் வாக்குவாதம் முற்றியதும், கீழ்வேளூர் வேட்பாளர் கார்த்திகாவை உள்ளே அனுமதிக்காததால், திமுக, அதிமுக கரை வேட்டி கட்டியதை எப்படி அனுப்புவிங்க, அதை அவிழ்த்துவிட்டு அனுப்புவிங்ளா என்று ஆவேசமாக பேசினார் இதனைத்தெடர்ந்து போலீசார் அவரை உள்ளே அனுப்பிவிட்டனர்.











