விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் மற்றும் பாலாபிஷேக விழா.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு கஞ்சி வார்த்தல் மற்றும் பாலாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி சக்தி பீடத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் தங்களது கைகளால் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தியுடன் அம்மனை தரிசனம் செய்து, அருளாசி பெற்றனர். விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.















