13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த முதல் 3ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் – விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் அறிவிப்பு
பேட்டி 1)*அனந்தசயன்(மாவட்ட செயலாளர் – தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி), 2) பாக்கியலட்சுமி
தமிழ்நாட்டில் நியாய விலை கடைகளை மூலம் செயல்படுத்தி வரும் தாயுமானவர் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும், பெரும்பாலான பயனாளிகளுக்கு இயந்திரத்தில் கை ரேகை மற்றும் கருவிழி சரியாக விழாத காரணத்தினால் இதனை ரத்து செய்ய வேண்டும், பகுதிநேர கடைகளுக்கு இயந்திரங்கள் இல்லாததினால் விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது, கடந்த 2021 ஆம் ஆண்டு க்கு பின்னர் ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவரும் ஓய்வுதியம் அனுமதிக்க வேண்டும், தற்போது பணி ஓய்வு பெறுபவர்கள் வரும் கருணைத்தொகை ஆயிரத்தை உயர்த்தி மையவங்கி பணியார்களுக்கு இணையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரம் புதிய பேருந்து அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது
இதில் கலந்துகொண்ட 500-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடையை பணியாளர்கள் தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தங்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த மாதம் 3-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை தெரிவித்தனர்













