பொதுத்துறை வங்கிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட வங்கிகள் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து தலைமையில் இந்தியன் வங்கி முன்பு வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் பிரதான கோரிக்கையாக வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும் வங்கி வேலை நாட்களை ஐந்து நாட்களாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தின் காரணமாக பொதுமக்கள் வங்கிக்கு சென்று பணப்பரி விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இதனை தொடர்ந்து திங்கட்கிழமை வரை நான்கு நாட்களும் விடுமுறை உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

















