மயிலாடுதுறையில் லலிதா ஜுவல்லரியின் 66-வது கிளையை அந்நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான கிரண்குமார் குத்துவிளக்கேற்றி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தபோது தூய்மை பணியாளர்களையும் அழைத்து குத்துவிளக்கேற்ற வைத்து கௌரவித்த இயக்குனர், லலிதா ஜுவல்லரிக்கு இப்போது நான் மட்டும் உரிமையாளர் இல்லை. லலிதா ஜூவல்லரி பங்கு சந்தையில் முதலீடு செய்யும் அனைவரும் உரிமையாளர்கள்:- வருங்காலங்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும்:- பிரதமர் மோடி நகைகளை வாங்க கூடாது என்று சொல்லவில்லை. தங்கம் வாங்க கூடாது என்று தான் சொல்லியுள்ளார் என பேட்டி:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் தென்னிந்தியாவின் முன்னணி தங்கநகை விற்பனை நிறுவனமான லலிதா ஜுவல்லரியின் 66-வது கிளை இன்று திறக்கப்பட்டது. நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான கிரண்குமார் குத்துவிளக்கேற்றி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் நிறுவனத்தின் உயரதிகாரிகள் பணியாளர்களை அழைத்து குத்துவிளக்கேற்ற வைத்த நிலையில் தூய்மை பணியாளர்களையும் அழைத்து திறப்பு விழாவில் குத்து விளக்கு ஏற்ற வைத்து கொண்டாடி மகிழ்ந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிரண்குமார், நம்பிக்கை மற்றும் வெளிப்படை தன்மையுடன் செயல்படுவதே லலிதா ஜுவல்லரியின் தனிச்சிறப்பு, லலிதா ஜூவல்லரியில் மட்டுமே வாடிக்கையாளர்கள் மற்ற கடையுடன் விலையை ஒப்பிட்டு பார்க்க விரிவான எஸ்டிமேட் ஸ்லிப் பெறலாம், நகைகளை மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் லாபத்தை விட வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே தங்கள் நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது. வருங்காலங்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும். நான் ஜுவல்லரி தொடங்கும்போது, கிலோ இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று நகையைத் தொட்டாலே இரண்டரை லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. லலிதா ஜுவல்லரிக்கு இப்போது நான் மட்டும் உரிமையாளர் இல்லை. லலிதா ஜூவல்லரியில் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர் அனைவரும் உரிமையாளர்கள் ஆவார்கள். இங்கு விற்பனை செய்யப்படும் நகைகள் தரமானது என்று நான் சொல்வதை விட மூன்றாவது நபர் பரிந்துரைப்பது தான் சிறந்தது. பிரதமர் மோடி நகைகளை வாங்க கூடாது என்று சொல்லவில்லை. தங்கம் வாங்க கூடாது என்று தான் சொல்லியுள்ளார். தங்கம் இறக்குமதியில் பிரச்சனை உள்ளது. சந்தைக்கு வரும் பழைய நகைகளை வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் அறிவிப்புக்கு பின்னரே தங்கம் வாங்க முடியும் என்று தெரிவித்தார்.
பேட்டி கிரண் குமார் (லலிதா ஜுவல்லரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்)

















