தொடர் விடுமுறை முன்னிட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், தேக்கமடைந்த நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம் :-
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு, சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்பொழுது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்காக, சுமார் 110 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தாமதமாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட காரணத்தால் ஏற்கனவே நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நிலையில், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தொடர்பு விடுமுறை என்பதால், நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இந்நிலையில் இன்று பெய்த திடீர் மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் தாழஞ்சேரி பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ளே மழை நீர் புகுந்தது. இதனால் அங்கு விவசாயிகள் கொள்முதல் செய்வதற்கு கொண்டு வந்திருந்த நெல்மணிகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதமடைந்தன. இதன் காரணமாக விவசாயிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.

















