தேமுதிகவின் 22 ஆம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு விழுப்புரத்தில் தேமுதிகவினர் பட்டாசு வெட்டி கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்
ஏழை எளிய மக்களின் விடிவெள்ளி, மக்கள் தலைவர்,சினிமாவில் மட்டும் அனைவருக்கும் ஒரே விதமான சாப்பாடு என்று புரட்சியை ஏற்படுத்தியவர் , கொடை வள்ளல் ,கேன பிரபு , புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கண்டெடுத்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 22-ம் ஆண்டு துவக்க விழா விழுப்புரத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
லஞ்சம், ஊழலை ஒழிப்போம், மக்கள் பணியில் நிலைப்போம் என்ற உயரிய தத்துவத்துடன் கேப்டன் அவர்களால் உருவாக்கப்பட்ட தேமுதிக, 22-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, விழுப்புரம் ஜானகிபுரம் ரவுண்டானா சாலையில், கோலியனூர் மேற்கு ஒன்றியம் சார்பில் 22 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் வழக்கறிஞர் எம்.கே.மனோ தலைமையில் நடைபெற்றது அப்போது பட்டாசு வெடித்து கழகக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், “கேப்டன் வழியில் என்றும் மக்கள் பணி தொடரும்” என சூளுரைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி அய்யனார், கோலியனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவா, துணை செயலாளர் வெற்றி, கண்டம்பாக்கம் கிளை செயலாளர் ரகுபதி, அவைத் தலைவர் அய்யனார், பொருளாளர் பிரபு, கொட்டப்பாக்கத்து வேலி கிளை செயலாளர் தவசி, வேல்முருகன், கிளைக் கழகப் பிரதிநிதிகள் குமார், சதீஷ், நிர்வாகி சுரேந்தர், கோவிந்தபுரம் கிளை செயலாளர் முருகன், கப்பூர் கிளை பொருளாளர் விஜயரசன், கொளத்தூர் கிளை செயலாளர்கள் லட்சுமணன், மணிகண்டன், கோவிந்தபுரம் கிளை நிர்வாகிகள் பழனி, அன்பழகன், திருப்பாச்சாவடி மேடு கிளை செயலாளர் அருள்ஜோதி, அய்யூர் அகரம் கிளை செயலாளர் பலராமன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

















