தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்து, விவசாயிகள் காதில் பூ வைத்துக்கொண்டும், கும்மியடித்தும் திருவள்ளூரில் பஜார் வீதியில் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் பஜார் வீதியில் விவசாயிகள் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகளின் 5 ஏக்கர் பயிர் கடன் முழுமையாகயும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் கடனில் 50 சதவீதத்தையும் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதியளித்திருந்தார். ஆட்சிக்கு வந்ததும், 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ள குறு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும். சிறு விவசாயிகளுக்கு 5000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் கூட்டுறவு பயிர்க்கடனை நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி திருவள்ளூர் பஜார் வீதியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காதில் பூ வைத்துக்கொண்டும், விசில் அடித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பியும், கும்மியடித்தும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த சாலையில் பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பேட்டி : புருஷோத்தமன் – விவசாயி







