பொறையாரில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி மாணவர்கள் பங்கேற்று பேரணியக சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் பகுதியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி மற்றும் வாக்களிப்பதின் அவசியம் குறித்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பொறையார் தவசுமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணி பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்று பேருந்து நிலையத்தை அடைந்தது இதில் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் 100 சதவீத வாக்களிப்பது கடமை என்பது வலியுறுத்தி பல்வேறு வாசகங்களை முழங்கியவாறு பேரணியாக சென்றனர் விழிப்புணர்வு பேரணி பூம்புகார் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மாணிக்கராஜ் தலைமையில் நடைபெற்றது பூம்புகார் தொகுதி உதவி வாக்காளர் பதிவு அலுவலர் வட்டாட்சியர் ஹரிதரன் முன்னிலையில் நடைபெற்றது இதில் தரங்கம்பாடி தேர்தல் துணை வட்டாட்சியர் சக்திவேல் பேரணியில் வரவேற்புரை ஆற்றி உறுதிமொழி வாசித்தார். பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.







