அம்பத்தூர் அடுத்தஅயப்பாக்கத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் இலவச மார்பக புற்றுநோய் மருத்துவ முகாம் நடைபெற்றது
சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி குடியிருப்பு பூங்கா பகுதியில் ரோட்டேரி கிளப் ஆப் சென்னை ரேடியன்ஸ் கிளப் இணைந்து பெண்கள் நலனுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக அயப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் இந்த முகாமில் பெண்களின் ஆரோக்கியம் மார்பகம் புற்றுநோய் கண்டறியும் மேமோ கிராம் பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை மற்றும் மருத்துவர்கள் பெண்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்
- ரோட்டேரியன் S. புருஷோத்தமன் – தலைவர், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ரேடியன்ஸ்.
- ரோட்டேரியன் லட்சுமி குமார் – செயலாளர்.
- ரோட்டேரியன் ஹேமலதா ராஜன் – சமூக சேவை – சுகாதாரப் பிரிவு.
- ரோட்டேரியன் புனிதா – மகளிர் மேம்பாட்டுப் பிரிவு.
- ரோட்டேரியன் டாக்டர் சுஜாதா – மாவட்ட சுகாதாரத் தலைவர், ரோட்டரி மாவட்டம் RID 3233. மற்றும் சிறப்பு மருத்துவர்களும் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்







