கார்த்திகை மாதம் முதல் சோமவாரம் தில்லையாடி பெரிய கோவிலில் 108 சங்காபிஷேகம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் சிறப்பு யாக்க பூஜை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பெரியநாயகி சமேத சார்ந்தாரை காத்த சுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தை ஒட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது முன்னதாக கோவில் வளாகத்தில் 108 சங்குகள் வைக்கப்பட்டு யாக பூஜை நடைபெற்றது யாக பூஜை நடைபெற்று பூர்ணாகதி உடன் கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது 108 சங்குகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபாடு செய்தனர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.







