செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை — கார்த்திகை தீப மழையால் மகிழ்ச்சியும், மற்றொரு பக்கம் அச்சமும்! ,,,?
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை முதலே பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.
இன்று கார்த்திகை தீபத் திருநாள் என்பதால், இந்த நாளில் மழை பெய்வது வழக்கமாக இருப்பதாகப் பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று பெய்யும் மழை மக்களில் ஒருபுறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மறுபுறம் செங்கல்பட்டு மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, கார்த்திகை தீப மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்ற அச்சம் காரணமாக, மழையின் தீவிரம் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம், செய்யூர், கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதிகள், மாமல்லபுரம், திருப்போரூர், செங்கல்பட்டு, மறைமலைநகர், வண்டலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
இந்த மழையானது தொடரும் என்பதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.







