திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகள் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவது என திமுக மாவட்ட இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர் வர்த்தக சங்க மண்டபத்தில் மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அமைப்பாளர் குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி. கலைவாணன் பங்கேற்று பேசியபோது . திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள ஐம்பதாவது பிறந்த நாள் விழா மிக எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் எனவும் திமுக ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகளுடன் இணைந்து மரக்கன்று நடுதல் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவது என மிக எழுச்சியாக கொண்டாட வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசு பொது மக்களுக்கு விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக செயல்படுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் திமுக கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர் என்கிற கலியபெருமாள், நகர செயலாளர் வாரை. பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.







