நாகை அருகே குழந்தைகளுடன் வறுமையில் வாடும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு அரசு வேலை வழங்க கோரிக்க
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி அருகே உள்ள கீழப்புதுார் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அரசு வேலை வழங்கக் கோரி தமிழக முதலமைச்சருக்கு உருக்கமான மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள சுந்தர் ஐ.டி.ஐ (ITI Fitter) படிப்பையும், மத்திய அரசின் நாற்காலி பின்னும் தொழிற்பயிற்சியையும் முறையாக முடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக அரசு வேலை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்விதப் பணி நியமனமும் கிடைக்கவில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
வயதான தாய், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வறுமைக்கோட்டிற்குக் கீழ் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், எனவே முதலமைச்சர் இதில் தலையிட்டுத் தனக்கு அரசு வேலை வழங்கி உதவ வேண்டும் எனவும் அவர் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
பேட்டி :சுந்தர் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி







