• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

by Satheesa
November 24, 2026
in News, News
0
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் : உலக அமைதிக்காக நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்பு.

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்குத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் பேரருட்திரு.தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடி பவனி நடைபெற்றது. உதவிப்பங்குதந்தை
வால்டர் அடிகளார் பவனியை வழிநடத்தினார். தஞ்சாவூர் திரு இருதய ஆண்டவர் அருட்தந்தையர் ஓய்வு இல்ல பொன்விழா தந்தை அருட்திரு.பிலோமின்ராஜ் அடிகளார் கொடியை புனிதம் செய்து புனித சவேரியாரின் திருஉருவ கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. “இதோ நான் இருக்கிறேன் என்னை அனுப்பும்” என்ற இறைவார்த்தையை மையமாக வைத்து நடைபெற்ற திருப்பலியில் உலக அமைதிக்காகவும், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், நோய் தொற்று முற்றிலும் ஒழிந்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.

இதில் தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகி அருட்தந்தை ஆரோன் அடிகளார், கூறைநாடு பங்குத்தந்தை அருட்திரு.தேவதாஸ் அடிகளார் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், வின்சென்ட் தே பவுல் சபையினர், இளையோர் இயக்கத்தினர், மரியாயின் சேனையினர், அன்பிய குழுவினர், பாடகற்குழுவினர், இறைமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்துடன் தொடங்கிய புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

வருகின்ற டிசம்பர் 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளது. டிசம்பர் 3-ஆம் தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

நாகை அருகே குழந்தைகளுடன் வறுமையில்வாடும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை

Next Post

செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை: மக்கள் அவதி!

Related Posts

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

நாகூர் கந்தூரி விழா தூய்மை பணிக்காக சென்ற தூய்மை பணியாளர்களை குப்பை அள்ளும் சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த வீடியோ

November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

மத்திய கிழக்கு & மத்திய ஆசிய கடல் பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக கடற்காகங்கள்

திருவள்ளூரில் நியாயவிலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

உதயநிதி ஸ்டாலின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 24, 2026
Next Post
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை: மக்கள் அவதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

நாகூர் கந்தூரி விழா தூய்மை பணிக்காக சென்ற தூய்மை பணியாளர்களை குப்பை அள்ளும் சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த வீடியோ

by Satheesa
November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

மத்திய கிழக்கு & மத்திய ஆசிய கடல் பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக கடற்காகங்கள்

by Satheesa
November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை: மக்கள் அவதி!

by Satheesa
November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

by Satheesa
November 24, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6