கந்த சஷ்டி நிறைவு நாளில் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆறுமுருகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் சஷ்டியை முன்னிட்டு முருகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரங்கள் தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனைகள் பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்தனர்
வேலூர்மாவட்டம், வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி நிறைவு நாளில் முருகர் சன்னதியில் முருகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்களை செய்து தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனைகள் நடந்தது பின்னர் உற்சவர் ஆறுமுக சுவாமி வள்ளி தெய்வானைக்கு தேன்,பழங்கள்,பால் தயிர் சந்தனம்,பன்னீர் இளநீர் ஆகியவைகளை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்களை செய்து வேதமந்திரங்கள் முழங்க மகாதீபாராதணைகளை செய்தனர் இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்







