மயிலாடுதுறை காவிரி துலா உற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருத்தேரோட்டம், வதான்யேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றன ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்:-
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி அனைத்து கோயில்களிலும் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மயிலாடுதுறை காவிரி கரையில் மயூரநாதர் ஆலயம் வதான்யேஸ்வரர் ஆலயம் ஐயாரப்பர் ஆலயம் புனுகீஸ்வரர் ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயம் தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆலயம் படித்துறை விஸ்வநாதர் ஆலயம் ஆகியவற்றில் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு . தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான வதான்யேஸ்வரர் ஆலயத்தில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. சுவாமி மற்றும் அம்பாள் விசேஷ அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் சிவசிவ என்று பக்தி கோஷம் முழங்க, தேரை வடம் பிடித்து இழுத்தனர். தர்மபுரம் ஆதீன கட்டளை தம்புரான் சுவாமிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.







