• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகை கோவில்பத்து கிராமத்தில் குளம் இருக்கும் இடத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் கழிப்பறை கட்டிடம்

by Satheesa
November 17, 2026
in News, News
0
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகை அருகே கோவில்பத்து கிராமத்தில் குளம் இருக்கும் இடத்தில் கோவில்; கோவில் அருகே தலித் மக்கள் பயன்படுத்தி வரும் விளையாட்டு மைதானம் மற்றும் கழிப்பறை கட்டிடம்; தலித் மக்கள் பயன்படுத்த கூடாது என சாதிய வன்மத்தோடு வேலி அமைக்க முயற்சிக்கும் தனி நபர்கள்; போலிஸ் பாதுகாப்போடு அளவீடு செய்து வேலி அமைக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு குறித்த செய்தி தொகுப்பு:

பேட்டி; கிராம மக்கள், கோவில்பத்து

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவில்பத்து கிராமம் தெற்கு தெருவில் சுமார் 200 க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அருள்மிகு எனையாளும் கண்ணபெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகில் உள்ள காலி இடத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் அமைக்கப் பெற்றுள்ள விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. அந்த விளையாட்டு மைதானத்தில் மின்னொளி வாலிபால் கோர்ட் உள்ளது. அருகில் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட கழிப்பறை கட்டிடம் அமைந்துள்ளது. மேலும் காலியாக உள்ள இடத்தில் பொங்கல் விழா உள்ளிட்ட விழாக்காளை கொண்டாடவும் அந்த இடத்தை ஆண்டாண்டு காலமாக தலித் மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த இடத்தை தலித் மக்கள் பயன்படுத்த கூடாது என்ற நோக்கில் சாதிய வன்மத்தோடு அதே ஊரைச் சேர்ந்த சில தனி நபர்கள் நீதிமன்றத்தில் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் அதனை சுற்றி காம்பவுண்ட் சுவர் வைக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் நீதிமன்றம் அந்த இடத்தை அளந்து வேலி வைக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி அந்த இடத்தை அளந்து வேலி வைப்பதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் 100 க்கும் மேற்பட்ட போலிஸ் பாதுகாப்போடு அளந்து வேலி வைக்க அதிகாரிகள் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் இந்த இடத்தில் அரசே விளையாட்டு மைதானமும், கழிப்பறையும் கட்டிக் கொடுத்துள்ளதாக கூறி இதை வேலி வைத்து அடைக்க கூடாது எனக் கூறி முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். அப்போது நீதிமன்ற உத்தரவுப் படி இடத்தை அளந்த போது கோவில் இருக்கும் இடம் அரசுக் சொந்தமான குளம் என தெரிய வந்தது. மேலும் விளையாட்டு மைதானம் , கழிப்பறை கட்டிடம் இருக்கும் இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் எனவும் தெரிய வந்தது. இதனையடுத்து நீதிமன்றம் வேலி அமைக்க உத்தரவு அளித்த இடம் எண் தவறாக இருந்ததால் அதிகாரிகள் வேலி வைக்காமல் திரும்பி சென்றனர்

. இது குறித்து கிராம மக்கள் கூறிய போது அந்த இடத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை தலித் இளைஞர்கள் பயன்படுத்துவதாலும், அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்த கூடாது என்ற நோக்கத்தோடு அதே ஊரில் உள்ள சிலர் சாதிய வன்மத்தோடு செயல்படுவதாக குற்றம் சாட்டினர். மேலும் கோவிலுக்கு என தனி காம்பவுண்ட் சுவர் ஏற்கனவே அமைக்கப்பெற்றுள்ளதாகவும் அதற்கு தாங்களும் வீட்டிற்கு 2000 ரூபாய் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். தற்போது காலியாக உள்ள இடம் எந்த விதத்திலும் கோவிலுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதாக கூறிய அவர்கள் ஆண்டாண்டு காலமாக விளையாட்டு மற்றும் விழாவிற்கு தாங்கள் பயன்படுத்தி இடத்தை பொது மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். தலித் மக்கள் பயன்படுத்த கூடாது என்பதற்காகவே விளையாட்டு மைதானத்தை வேலி வைத்து அடைக்க சிலர் முயற்சி செய்ய நினைப்பதால் ஒற்றுமையாக இருக்கும் ஊரில் இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வை எடுத்து இரு தரப்பினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சத்தியம் தொலைக்காட்சிக்காக நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் செ. சீனிவாசன்

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

மயிலம் முருகன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி

Next Post

நாகை ஆட்சியர் வளாகத்தில் மழைநீர் வடிய வெட்டப்பட்ட ராட்சத பள்ளத்தால் மாற்றுத்திறனாளிகள் அவதி

Related Posts

டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

மயிலாடுதுறையில் வேலைக்குச் சென்ற பெண் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, விழுப்புரம் ESSK செவிலியர் கல்லூரி இணைந்து நீரிழிவு நோய் விழிப்புணர்வு

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

காவிரியில் புகழ்பெற்ற துலா உற்சவர் தீர்த்தவாரி இன்று நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் திருமண மண்டபத்தில் தனுஷ் நற்பணி இயக்கம்

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

நாகை ஆட்சியர் வளாகத்தில் மழைநீர் வடிய வெட்டப்பட்ட ராட்சத பள்ளத்தால் மாற்றுத்திறனாளிகள் அவதி

November 17, 2026
Next Post
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி

நாகை ஆட்சியர் வளாகத்தில் மழைநீர் வடிய வெட்டப்பட்ட ராட்சத பள்ளத்தால் மாற்றுத்திறனாளிகள் அவதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

மயிலாடுதுறையில் வேலைக்குச் சென்ற பெண் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை

by Satheesa
November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, விழுப்புரம் ESSK செவிலியர் கல்லூரி இணைந்து நீரிழிவு நோய் விழிப்புணர்வு

by Satheesa
November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

காவிரியில் புகழ்பெற்ற துலா உற்சவர் தீர்த்தவாரி இன்று நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

by Satheesa
November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் திருமண மண்டபத்தில் தனுஷ் நற்பணி இயக்கம்

by Satheesa
November 17, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6