மாணவன் செல்போன் உபயோகித்ததை தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி மாயமான 8-ஆம் வகுப்பு மாணவன் விழுப்புரத்தில் மீட்பு:-
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நடுதெருவைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன் கிரிவாசன் (14). இவர் மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெருஞ்சேரியில் உள்ள தனது தாய்மாமன் வடிவேலுவின் வீட்டில் தங்கி, மங்கநல்லூரில் உள்ள கே.எஸ்.ஓ (KSO) பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கிரிவாசன் தொடர்ந்து செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மகனைப் பார்க்க வடிவேலு வீட்டிற்கு வந்த தந்தை இதனைப் பார்த்த அவரது தந்தை உதயகுமார் மகன் விரிவாசன் செல்போன் தொடர்ந்து பயன்படுத்துவதை கண்டித்து செல்போனைப் பறித்துக் கொண்டு படிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த மாணவன், நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி மாயமானார்.
சிறுவனைக் காணாமல் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், நேற்று இரவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனிடையே, விழுப்புரம் பேருந்து நிலையத்தில் தனியாக நின்றுகொண்டிருந்த மாணவனை அங்கிருந்தவர்கள் மீட்டு, விழுப்புரம் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் காப்பக நிர்வாகத்தினர் மாணவனிடம் விசாரணை நடத்தி, அவனது தந்தைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த பெற்றோரும் உறவினர்களும் மாணவனை அழைத்து வர விழுப்புரம் விரைந்துள்ளனர்.







