செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் செல்போன் டவருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சீவூர் ஊராட்சி காந்திநகர் முருகன்நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளது இப்பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க ஆரம்ப கட்ட பணிகள் நடப்பதாகவும் அதற்காக பெரிய அளவில் பள்ளம் தோண்டி இருப்பதாகவும் இப்பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் குழந்தைகள் மற்றும் அப்பகுதியில் இருக்கும் பெரியவர்களுக்கும் அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் பெரும் பாதிப்பாக இருக்கும் எனவும் அப்பகுதியில் இயங்கி வரும் குழந்தைகளின் அங்கன்வாடி மையம் அருகே இருப்பதாலும் இந்த தனியார் செல்போன் டவரை இப்பகுதியில் அமைக்க கூடாது எனவும் வேறு பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சீவூரா ஊராட்சி மன்ற தலைவர், தாலுகா அலுவலகம்,வட்டார வளர்ச்சி அலுவலகம் என பல அரசு அலுவலகங்களில் தொடர்ந்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.இதனிடையே பொதுமக்களின் எதிர்ப்பை மீறியும் தனியார் செல்போன் டவர் அமைக்க பெரிய அளவில் ராட்சத பள்ளம் தோண்டி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மாலை அப்பகுதியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் என நூற்றுக்கும் மேற்பட்டோர் செல்போன் டவர் அமைக்க பள்ளம் தோண்டி நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு இடையே இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது







