பாடி குப்பத்தில் ரூ.80.24 லட்சம் மதிப்பில் புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் திறப்பு
முதலமைச்சர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார் – அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜி. பாலமுருகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்
சென்னை பாடி குப்பம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ரூ.80.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளைத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக, பாடி குப்பத்தில் அமைந்துள்ள புதிய குடியிருப்புகளை அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜி. பாலமுருகன் குத்துவிளக்கேற்றி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள இந்தக் குடியிருப்புகள் திறப்பு விழாவில், அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.







