ரூ.4.கோடியே 88 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு – அமைச்சர் காந்திராஜ், ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் பங்கேற்பு
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.4 கோடியே ,88 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலைய கட்டடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன.
நெமிலி வட்டம் அரிகிலபாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.78.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தினை கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் சுகாதார நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் காந்தியராஜ் முதலமைச்சரின் புகைப்படத்தை சுகாதார நிலையத்தில் மாட்டி வைத்தார்
இதனை தொடர்ந்து மருத்துவர்களிடம் அமைச்சர் காந்தி ராஜ் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும் பார்வையிட்டார்
இதனைத் தொடர்ந்து காணொளி காட்சி வாயிலாக தக்கோலம், விளாப்பாக்கம், திமிரி ஆகிய பேரூராட்சிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களையும், சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் செங்கல்நத்தம் ஊராட்சியில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டடத்தையும் திறந்து வைத்தனர்.
மொத்தம் ரூ.4. கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார நிலைய கட்டடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராணி, வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.







