திருவாரூரில் ரேஷன் கடையில் வாங்கிய கோதுமையில் கலப்படம் – புது விதமான பூச்சியா அல்லது உயிருக்கு ஆபத்தான விதையா என சந்தேகம் எழுந்துள்ளதால் பரபரப்பு
திருவாரூர் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கோதுமை இப்படித்தான் உள்ளது. இது என்ன வகை என்று எங்களுக்கும் தெரியவில்லை என ஊழியர்கள் கைவிரிப்பு
கோதுமைக்கு நிகராக இந்த வகை பூச்சிகளும் இருப்பதால் பொதுமக்கள் அச்சம் . கோதுமையை அரைக்கும் போது இந்த வகை பூச்சிகளும் சேர்ந்து அரை பட்டு மாவாக கூடிய நிலை.
தீபாவளி சமயத்தில் ரேஷன் கடையில் வாங்கும் பொருட்கள் தரம் குறைந்ததாக இருப்பதால் அரசு நிர்வாகம் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 700 நிரந்தர மற்றும் பகுதி நேர கடைகள் உள்ளன. இந்நிலையில் மக்கள் பயனில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு அரிசி சீனி மற்றும் கோதுமையும் வழங்கப்பட்டு வருகிறது.
கோதுமை வரத்து தற்போது அதிகரித்துள்ளதால் ரேஷன் கார்டுதாரர்கள் தேவைக்கு 5 முதல் 10 கிலோ தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் அவ்வப்போது தூசி, தும்புகளோடும், மடித்த நிலையிலும் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில்,
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாரூர் அருகே புலிவலம் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் கோதுமை வாங்கி சென்ற பொதுமக்கள் கோதுமையில் வித்தியாசமான ஒன்று இருப்பதை கண்டு அதனை தண்ணீரில் அலசி காய வைக்க முயன்றனர். அப்போது அதில் வித்தியாசமான பூச்சி போன்ற வடிவத்தில் ஒன்று மிக அதிகமாக இருந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தண்ணீரில் அலச அலச மீண்டும் மீண்டும் அந்த வகை பூச்சிகளும் வந்து கொண்டே இருக்கிறது.
இது குறித்து நியாய விலை கடையில் சென்று விசாரித்த போது… இது பூச்சிகள் இல்லை. தற்போது வழங்கப்படும் கோதுமையில் விநோத வடிவில் கிடந்த முள்விதை வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது.
கோதுமையை விட சிறிய அளவில் உள்ள இது எந்த வகையான விதை என்பதை இனம் காண முடியவில்லை. கோதுமையோடு சேர்ந்து இதுவும் அரவையின் போது மாவாகி விடுகிறது. இதனால் நன்மையா, தீமையா என்பது தெரியவில்லை என, ரேஷன் கடை வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் விசாரித்தபோது,
கோதுமை மூட்டைகள் அனைத்திலுமே சிறிய அளவிலான விதைகள் இவ்வாறு கலந்துள்ளது. இதுகுறித்து இதுவரை புகார் ஏதும் வரவில்லை, எனவும் குடோனில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவித்த போது சில மூட்டைகளில் இது போன்று இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளதாக அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் .
இது குறித்து பொது மக்கள் கூறுகையில்…
சமீபத்தில் திருவாரூர் புலிவலம் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் கோதுமை வாங்கப்பட்டதில் எந்த அளவு கோதுமை இருக்கிறதோ அந்த அளவு அதிகமாக பூச்சிகள் இருக்கிறது. பண்டிகை காலத்தில் எங்களை போல் உள்ள சாமானிய மக்கள் ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்களை வைத்து மட்டுமே பண்டிகையை கொண்டாடுகிறோம். ஆனால் ரேஷன் கடையில் கிடைக்கக்கூடிய பொருள்கள் மிகவும் தரமாற்ற பொருள்களாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. நான் வாங்கிய கோதுமையில் ஒரு கோதுமை என்ற அளவிற்கு ஒரு பூச்சி உள்ளது வாங்கின பணம் வீணாகப் போய்விட்டது. ஆடு மாடுகளுக்கு கூட கொடுக்கக்கூட பயந்து குப்பையில் கொட்டக்கூடிய நிலைமைக்கு ஆளாகிவிட்டது. அரசு இதை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ரேஷன் கடைகளில் கொடுக்கக்கூடிய பொருட்கள் மக்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் ஏதுவாக இல்லை என்பது தெரிய வருகிறது. கோதுமைக்கு நிகராக மரவட்டைகள் செத்துப் போய் கூடாக உள்ளது மாதிரி அசுத்தமான சூழலில் அருவருக்கத்தக்கவாறு ரேஷன் கடைகளில் அதை விநியோகம் செய்கிறார்கள். இதை உடனடியாக அரசு கூர்ந்து கவனித்து நியாய விலை கடைகளில் கொடுக்கும் பொருட்களை சுத்தமாக கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஆட்சி காலத்தில் கொடுக்கக்கூடிய அரிசியில் கருப்பு அரிசி இல்லாமல் இருப்பதற்காக கலர் சார்ட் என்ற இயந்திரம் மூலம் அரிசியை பிரித்து தனியார் கடையில் உள்ள அரிசி போல் தருவார்கள் ஆனால் இந்த தற்போதைய ஆட்சியில் எந்த ஒரு கவனமும் எடுக்காமல் அரிசியை பூச்சி உள்ள அரிசியாகவும் கொடுக்கப்படுகிற கோதுமை மரவட்டை நிறைந்ததாகவும் உள்ளது இது நுகர்வோருக்கு எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்படாதது. இதை அரசு கவனம் எடுத்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடையில் தூய்மையாக கொடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர், அமைச்சர் சிறப்பு கவனம் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.
பேட்டி:
1.செந்தில் – பாதிக்கப்பட்டவர் .
- வரதராஜன் – சமூக ஆர்வலர்

















