வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ளமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டமானது மாவட்டத்தலைவர் ஜோஷி தலைமையில் நடைபெற்றது இதில் நிர்வாகி தீனதயாளன் துவங்கி வைத்தார் இதில் வேந்தன்,தினகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் இந்த தர்ணா போராட்டத்தில்கோரிக்கைகள்டேப்ஸ் திட்டத்திற்கான விதிமுறைகளை வெளியிட்டு பழையபென்சன் திட்டத்தைஅமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துவங்க வேண்டும் டேப்ஸ் திட்டத்தின் பயன்களை நீட்டிக்க வேண்டும் சத்துணவு ஊழியர்களை கொண்டே காலை உணவு | திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை நீதிமன்றதீர்ப்பின் அடிப்படையில் பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.மருத்துவதுறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைத்து நியமனங்களையும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் தமிழக அரசின் முடிவை கைவிட்டு, காலமுறை ஊதிய அடிப்படையிலான நியமனங்களை மேற் கொள்ள வேண்டும்.6 இலட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும்.தமிழக இளைஞர்களுக்கு அரசுத்துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் காலமுறை ஊதியத்தில் நியமனங்கள் வழங்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் செய்தனர்
பேட்டி:தினேஷ் (அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர்)

















