மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ஒரு கோடி பனை விதை நடும் திட்டத் தொடக்க விழாவில் உட்கட்சி பூசல் காரணமாக தவெக நிர்வாகிகள் மோதிக்கொண்ட நிலையில் திமுகவில் இருந்து தவெகவில் இணைந்த மயிலாடுதுறை பகுதி கவுன்சிலர் ரஜினி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம்:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் தனியார் அறக்கட்டளை மற்றும் சேவை சங்கம் சார்பாக கடலோர பனை அரண் என்ற தலைப்பில் ஒரு கோடி பனை விதை நடவு பணி தொடக்க விழா கடந்த 23ஆம்தேதி நடைபெற்றது. இதில் உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் கலந்துகொண்ட நிலையில் உட்கட்சி பூசல் காரணமாக மாவட்ட செயலாளர் தரப்பை சேர்ந்த தரங்கம்பாடி பேரூர்கழக செயலாளர் சதீஸ்குமார் திமுகவில் இருந்து தவெகவில் இணைந்த மயிலாடுதுறை பகுதி கவுன்சிலர் ரஜினி ஆதரவாளரான தரங்கம்பாடியை சேர்ந்த அன்புராஜ் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் தொடர்ந்து இரு தரப்பாக பிரிந்து கட்சியினர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதை கண்ட அமைச்சர் அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பிரச்சனையில் ஈடுபட்டால் முதலமைச்சருக்குதான் கெட்ட பெயர் ஏற்படும். எனவே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட .தவெக சார்பில் மாவட்ட செயலாளர் கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கவுன்சிலர் ரஜினி கழகத்தின் கொள்கைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் முரணான வகையில் தொடர்ந்து செயல்பட்டதால் தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் உத்தரவின் பேரில் இன்று முதல் மா.ரஜினி அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவுருடன் கட்சி நிர்வாகிகள் நேரிடையாகவோ மறைமுகமாகவோ எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளகூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட செயலாளர், நிகழ்ச்சி நடைபெறும் பகுதி நிர்வாகிகளை அழைக்காமல் கட்சிக்கு முரணாக செயல்பட்டதால் நீக்கம் செய்யப்பட்டதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

















