ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக திற்பரப்பு அருவி அருகே செயல்பட்டு வந்த விதவை பெண்ணின் பெட்டி கடையை எந்த வித அறிவிப்பும் இன்றி கால அவகாசம் கொடுக்காமல் பொருட்களோடு இடித்து அகற்றிய அதிகாரிகள்
பெரிய பெரிய ஹோட்டல் ரெஸ்டாரன் விட்டு விட்டு பெட்டிக்கடை மட்டுமே அகற்றம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபல சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவி அருகே சாலையோரம் ஜீவா என்ற பெண்மணி அவரது கணவன் அதற்கு முன் கணவரின் தந்தை என சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பெட்டி கடை நடத்தி வருகின்றனர் தற்போது கணவனை இழந்த ஜீவா இந்த பெட்டி கடையை நடத்தி பிழைப்பு நடத்தி வரும் நிலையில் இன்று அங்கு ஜேசிபி இயந்திரத்தோடு போலீசார் பாதுகாப்போடு வந்த நீர்வள ஆதார துறை அதிகாரிகள் எந்த வித முன் அறிவிப்பும் கொடுக்காமல் ஜீவாவின் பெட்டி கடையில் இருந்த பொருட்களை கூட அகற்ற கால அவகாசம் கொடுக்காமல் இடித்து அப்புறப்படுத்தினர் இதனால் அந்த விதவை பெண் செய்வதறியாமல் தவித்தார் இந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதி மன்ற உத்தரவு பிறப்பித்தும் இந்து அறநிலையத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ,நெடுஞ்சாலைத்துறை ,பேருராட்சிக்கு உட்பட பகுதிகளில் பெரிய ரெஸ்டாரன்ட் ஹோட்டல்கள் பெரிய கடைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தவிக்கும் போது பெட்டி கடையை மட்டும் ஆக்கிரமிப்பின் பெயரில் கால அவகாசம் கொடுக்காமல் இடித்து அகற்றியது
பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது















