விழுப்புரம் உலகில் 25 ஆண்டுகளாக எந்த தோல்வியும் காணாத தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார் என பாஜக மாநில துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் கூறியுள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி பொது வாழ்வில் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் பாஜக சார்பில் நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக “சேவா சங்கல்ப் அபியான்” என்ற பெயரில் பல்வேறு சேவை மற்றும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் சேவா ஜோதி நிகழ்ச்சி மற்றும் பேரணி இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணை தலைவர் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ” வளர்ந்த பாரதத்திற்கான” உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயபிரகாஷ்.,
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நாளில் குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இன்றோடு மக்கள் சேவையில் 25 ஆண்டுகளாக தன்னை அர்பணித்து கொண்டுள்ளார். உலகில் கடந்த 25 ஆண்டுகளாக எந்த தோல்வியும் காணாத தலைவராக மோடி இருக்கிறார். அந்த நாளை சேவை நாளாக எடுத்து நாங்கள் கொண்டாடுகிறோம். இதற்கான பேரணியை நடத்தி முடித்துள்ளோம். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பாடுபடுவோம் என்றார்.















