சீர்காழியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி ஏராளமான மாணவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு முழக்கம் எழுப்பியவாறு சென்றனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தகவல் அறியும் உரிமை சட்ட வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சீர்காழி காவல் நிலையம் வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை கோட்டாட்சியர் பாலமுருகன், டிஎஸ்பி சரவணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணியில் தாசில்தார் ராஜரத்தினம், துணை தாசில்தார் பாபு மற்றும் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் அறிதல் நமது உரிமை, வெளிப்படைத்தன்மை நல்லாட்சியின் அடையாளம், கேள்வி கேட்போம் தகவல் பெறுவோம்,
உரிமையை நிலை நாட்டுவோம் தகவல் அறியும் உரிமை மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை அரசின் செயல்பாடு வெளிப்படையாகட்டும் உரிமை வலுப்பெறட்டும் என முழக்கங்கள் எழுப்பியவாறு முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் நிறைவு செய்தனர்
















