CNG எரிவாயு தட்டுபாட்டை நீக்கி எரிவாயு நிலையத்தை அதிகப்படுத்துவது உட்பட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சோசியல் டெமாக்ரடிக் ட்ரேட் யூனியன் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் சோசியல் டெமாக்ரடிக் ட்ரேட் யூனியன் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர், ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க மாவட்ட தலைவர் முகம்மது பைசல் தலைமை வகித்தார் தொழிற்சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சையது இப்ராஹிம் தலைமை ஏற்று கண்டன உரை நிகழ்த்தினார், ஆர்ப்பாட்டத்தில் கார்ப்பரேட் நிறுவன பைக் டாக்சிகளை தடை செய்ய கோரியும் ஆட்டோ மீட்டர் கட்டனத்தை உயர்த்திட கோரியும் டீசல் ஆட்டோ களை அனுமதித்திட கோரியும் CNG எரிவாயு தட்டுபாட்டை உடனே சரி செய்ய எரிவாயு நிலையத்தை அதிகபடுத்திட கோரியும் முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 30 க்கு மேற்பட்ட சோசியல் டெமாக்ரடிக் ட்ரேட் யூனியன் அமைப்பை சேர்ந்த தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.













