மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்ணாவின் 118 வது பிறந்த நாள் விழா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா 118-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை தேனி கரையில் இருந்து திமுக தொண்டர்கள் உடன் பேரணியாக வந்து பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் .முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நகர செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட நகர பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஏராளமானோர் பங்கேற்று முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடினர்.













