விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் கோயில்கள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு தலங்களிலும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தரங்கம்பாடி தாலுக்கா எரவாஞ்சேரி, சங்கரன்பந்தல், இலுப்பூர், உத்திரங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பல்வேறு வடிவங்களில் 3 அடி முதல் 7 அடிவரை உள்ள பலவண்ண நிறத்தில், பல்வேறு இடங்களில் பக்தர்களை கவரும் வகையில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து தரங்கம்பாடி கடலில் சிலைகள் கரைக்கப்பட்டது மேலும் சங்கரன்பந்தல் கடைவீதியில் இருந்து சுமார் ஏழுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மேள வாத்தியங்கள் முழங்க இளைஞர்கள் ஆரவாரத்துடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தரங்கம்பாடி கடலில் கரைக்கப்பட்டது. விநாயகர் சிலைகள் ஊர்வலம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் கடலோர காவல் நிலைய காவலர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.













