ஐந்து நாள் ஆன்மிக பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ள, தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம், உலக நன்மை வேண்டியும், இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும்,
ஜப்பானில் செண்டாய் Sendai மாநிலத்தில் ஹிரோசே Hirose நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு மேற்கொண்டார், ஏராளமான ஜப்பானியர்கள் பங்கேற்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. திருக்கடையூர் வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட 27 தேவஸ்தானங்கள் இந்த ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதன் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், இந்திய ஜப்பானிய ஆன்மீக கூட்டமைப்பு சார்பில், எட்டாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் உலக நல்லிணக்க கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, ஜப்பான் சென்றுள்ளார். அங்குள்ள ஜப்பானிய வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்றுள்ள, தருமபுரம் குரு மகா சன்னிதானம், உலக நன்மை வேண்டியும் இயற்கை சீற்றங்களால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவும், ஜப்பானில் செண்டாய் Sendai மாநிலத்தில் ஹிரோசே Hirose நதிக்கு ஆர்த்தி எடுத்து தீப வழிபாடு மேற்கொண்டார். ஜப்பான் சைவ ஆதீனம், கும்பமுனிகள் மற்றும் ஏராளமான ஜப்பானியர்கள் பங்கேற்று தீப வழிபாடு மற்றும் , நதிக்கு மலர் தூவி அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

















