மயிலாடுதுறை மாவட்டத்தில், நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி, நுகர் பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதன் காரணமாக, மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு, மழையில் நனைந்து அறுவடை செய்த நெல் மூட்டைகள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்பொழுது அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் 110 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் முப்பதுக்கு மேற்பட்ட இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது அரசின் அறிவிப்பை நம்பி விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர். பத்து நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்யாத காரணத்தால், ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மூட்டை நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட நுகர்வோர் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அனைத்து விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு பங்கேற்ற சாலை மறியல் நடைபெற்றது. ஏராளமான விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மயிலாடுதுறை கும்பகோணம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பைட்:-
ராமலிங்கம் விவசாயி

















