திடீரென்று பெய்த மழை காரணமாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம், குவிக்கப்பட்ட நெல்மணிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால், விவசாயிகள் வேதனை:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் போதிய தண்ணீர் இல்லாத நிலையில், கடந்த குறுவைப் பட்டத்தில் 98 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்தனர். நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றது. அறுவடை செய்யப்பட்ட நிலை கொள்முதல் செய்வதற்காக நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் 110 இடங்களில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இதுவரை 31 இடங்களில் மட்டுமே மேற்கொள் முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. கொள்முதல் நிலையங்கள் திறக்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. இந்நிலையில் இன்று மாலை திடீரென்று பெய்த பலத்த மழை காரணமாக, நலத்துக்குடி, வழுவூர், முளைப்பாக்கம், உள்ளிட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்திருந்த சுமார் 20000 மூட்டை நெல்மணிகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன, மேலும் குவியலாக வைக்கப்பட்டிருந்த நெல்மணிகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்ததால், அதனை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக, நெல் மூட்டைகள் மழையில் நனையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பைட்: –
விவசாயி ஒருவர் பேசும் வீடியோ உள்ளது

















