கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் அலுவலகத்தில் அனுமதி இன்றி தமிழ்நாடு தலித் உரமை பாதுகாப்பு இயக்கம் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்- நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டதாக கூறி 50க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன- இதனால் மண்டல பொது மேலாளர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் அரசு போக்குவரத்து கழகத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் ஆறு மாதத்திற்கு ஒரு முறையில் அரசு பேருந்துகளை ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு பேருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது ஆனால் முதல் முறை சீனியாரிட்டி சுழற்சி அடிப்படையில் பேருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டது அது ஆறு மாதங்கள் கடந்துள்ளது. ஆறு மாதங்கள் முடிந்தும் அடுத்த முறை சீனியாரிட்டி சுழற்சி அடிப்படையில் பேருந்து நிலையம் செய்யாமல் அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி கோட்ட மேலாளர் செல்வம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை பின்பற்றாமல் நீதிமன்றத்தை ஏமாற்றி திட்டமிட்டு காலம் தாழ்த்தி வருவதாகவும், அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மற்றும் பணியில் நியமனம் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது அதை உத்தரவை புறந்தள்ளி அதை பின்பற்றாமல் அரசு போக்குவரத்து கழகம் ராணி தோட்டம் பணிமனையில் 3 ல் கிளை மேலாளர் சதீஷ்குமார் என்பவர் சில ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்களை மாற்றுப் பணியில் ஈடுபடுத்தி வந்ததாகவும், சென்னை உயர்நீதி மன்றத்தை ஏமாற்றும் விதமாக செயல்பட்டு வந்த அரசு போக்குவரத்துக் கழகத் திருநெல்வேலி கோட்டா மேலாளர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ஆகியோரை கண்டித்து உடனடியாக சுழற்சி அடிப்படையில் பேருந்துகளை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு நியமனம் செய்ய கோரியும் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அதை பின்பற்றாமல் லஞ்சம் பெற்றுக் கொண்டு பணி நீக்கம் செய்ய கோரியும் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தலித் உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் அனுமதியின்றி வளாகத்துக்குள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை வருகிறது.

















