விழுப்புரம் மின்கசிவால் வீடு தீக்கிரை: ரூ.8 லட்சம் பொருட்கள் சேதம்
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தவெக மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல் நிவாரண உதவி
:
விழுப்புரம் மாவட்டம் அனுமந்தபுரம் கிராமத்தில் வசித்து வரும் காசிநாதன் மகன் ராமலிங்கம் என்பவரது வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.
மின்கசிவு காரணமாக வீட்டில் பற்றிய தீ மளமளவென பரவி வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள், ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி நாசமானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட கழக செயலாளர் விஜய் வடிவேல், அனுமந்தபுரம் கிராமத்திற்கு நேரில் சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உடனடி தேவைகளை கருத்தில் கொண்டு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள், புடவை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும், ரூ.5,000 ரொக்கப் பணத்தையும் நிவாரணமாக வழங்கினார்.
தீ விபத்தில் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வரும் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜய் வடிவேல் தெரிவித்தார்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கிய விஜய் வடிவேலுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

















