கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி ஒருவர் கடந்த ஐந்து வருடங்களாக கொடுத்த கோரிக்கை மனு மீது நடவடிக்கை இல்லாத காரணத்தினால் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வெற்றுகாகிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது இதில் ஏராளமான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக கொடுத்து எடுத்துரைத்தனர். இந்த நிலையில் நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியை சேர்ந்த முன்னாள் மீன் கூட்டுறவு சங்க சேர்மன் சகாயம் தொடர்ந்து சட்டத்துக்கு புறம்பாக குளங்களில் தாமரை இலை பயிரிடப்பட்டு விற்பனை நடைபெறுவதாக குற்றம் சாட்டி கடந்த ஐந்து வருடங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து இன்று நடைபெற்ற விவசாயி குறைதீர்க்கும் கூட்டத்தில் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் அதிகாரிகள் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன முறையில் வெற்று காகிதத்தை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி சகாயம் அளித்தார். மாவட்ட ஆட்சியரிடம் ஐந்து வருடங்களாக கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அதிருப்தியில் வெற்றுகாகிதத்துடன் மனு கொண்டு வந்ததாக தெரிவித்தார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் பாதுகாவலர்கள் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் வெற்று காகிதத்தை மனுவாக கொடுத்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.
பேட்டி: சகாயம் ( விவசாயி)
















