கிராமங்கள் தோறும் அரசு பள்ளிகள் திறக்க வேண்டும், ஒரு மாணவர் இருந்தாலும் அந்த கிராமத்தில் அரசு பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இவ்வாறு தெரிவித்துள்ளனர்…
திருவள்ளூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயர்வை வழங்கிடவும், அரசாணை 243ஐ ரத்து செய்து ஒன்றிய அளவில் முன்னுரிமை பட்டியல் தயார் செய்து தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க கோரியும், டெட் 1,டெட் 2, தாள்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் 40% ஆக குறைத்து வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் முன்வைத்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி 100-க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் மாநிலத்தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழக முழுவதும் புதிய அரசு பள்ளிகளை திறக்க வேண்டும், ஒரு மாணவர் இருந்தாலும் அந்த கிராமத்தில் பள்ளி திறக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பேட்டி : இரா.தாஸ் – மாநில ஒருங்கிணைப்பாளர் ஜாக்டோ ஜியோ அமைப்பு.













