நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது என்று மயிலாடுதுறை தவெக அலுவலகத்திற்கு வந்த குடுகுடுப்பைக்காரர் , முதல்வர் விஜய்க்கு எதிர்பார்த்த காரியம் வெற்றியாகும், இரண்டு கண்டங்கள் முடிந்த நிலையில் ஒரு கண்டம் மீதி இருக்கிறது என்று வாக்கு சொல்லி குடுகுடுப்பை வாசித்தார், ஆர்வத்துடன் கேட்ட தொண்டர்கள் :-
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்து நூறாவது நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட அலுவலகத்தில், அக்கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பிறகு உள்ளே அமர்ந்திருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஒரு குடுப்பைக்காரர், முதலமைச்சர் ஜோசப் விஜய் பெயரை சொல்லி குடுகுடுப்பை வாசித்தவாறு, பலன் கூறினார். எதிர்பார்த்த காரியம் ஒன்று வெற்றியாகும் என்றும், வரம்புக்கு மீறிய செலவு ஆக்கிக் கொண்டிருக்கிறது, எல்லோருக்கும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார், ஆனால் பலன் பெற்றவர்கள் அவரை தூற்றுகிறார்கள், மூன்று கட்டத்தில் இரண்டு கண்டத்தில் அவர் தப்பி விட்டார் என்றும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார், அது விரைவில் கைகூடிவரும் என்று குடுகுடுப்பை வாசித்து பலன் சொன்னார். இதனை தவெக தொண்டர்கள் ஆர்வமுடன் கேட்டு ரசித்தனர்














