திருக்கடையூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 8ஆம் ஆண்டு நினைவு நினைவு தின அமைதி பேரணி.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகமெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் திமுக மத்திய ஒன்றியம் சார்பில் மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார் தமலையில் திருக்கடையூர் ஆர்ச் பகுதியில் இருந்து பேருந்து நிலையம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் அமைதிப் பேரணியாக சென்று பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.













