மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 8-ம் ஆண்டு நினைவு தினம் திமுகவினரால் அனுசரிப்பு ; திமுகவினர் ஊர்வலமாக வந்து கலைஞரின் திருவுருவ சிலை மற்றும் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை :-
முன்னாள் முதல்வர் கலைஞரின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் இருந்து துவங்கிய அமைதி பேரணி முக்கிய வீதிகளின் வழியாக வந்து கடைவீதியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலை முன் அலங்கரிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கலைஞர் திருவுருவ படத்திற்கு திமுகவினர் மாலை அனைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். இதேபோல் குத்தாலம் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர்.மங்கைசங்கர் தலைமையில் பேரணியாக சென்று வழுவூரில் அமைந்துள்ள கலைஞரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .இதேப்போல் மயிலாடுதுறை நகரில் திமுக சார்பில் நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் பேரணியாக சென்று பகுத்தறிவு மன்றத்தில் அமைந்துள்ள கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அறிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட துணை செயலாளர்கள் ஞானவேலன், செல்வமணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்













